மதுரை தெற்கு மாசி வீதியை சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றிணைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நல்லெண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் வகைகள், மதுரையிலுள்ள மேலமாசி வீதி , வடக்கு மாசி வீதி உள்ளிட்ட வீதிகளில் உள்ள கடைகளில் சில்லரை விற்பனைக்கு விற்கப்படுகிறது.
இது போன்று சில்லரையில் விற்பனை செய்யும் சமையல் எண்ணெயில் எந்தவித பதிவுபெற்ற நிறுவனத்தின் தரச்சான்றும் இல்லை. மேலும், கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதால், இதை பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இது உணவுப் பாதுகாப்பு சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, மதுரை நகரில் வடக்குமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் தரசான்று பெறாத சமையல் எண்ணெய்களை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். அவ்வாறு விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் ,பி. புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.