ETV Bharat / state

'மருத்துவப் படிப்புக்கான இடங்களை அகில இந்திய மருத்துவ விதியின் கீழ் நிரப்பக் கூடாது' - மனுதாரரின் வழக்கு தள்ளுபடி! - madurai highcourt cancel the case regarding medical college seat allocations

மதுரை: தமிழ்நாடு மருத்துவப் படிப்புக்கான இடங்களை அகில இந்திய மருத்துவ விதியின் கீழ் மதிப்பெண்கள் வழங்கி, நிரப்பக் கூடாது என்ற வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai highcourt
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By

Published : Dec 19, 2019, 9:27 AM IST

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், " நான் மதுரை மாவட்டம் வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2015ஆம் ஆண்டு முதல் உதவி அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகிறேன். முதுநிலை மருத்துவக் கல்வி பயில்வதற்காக நீட் தேர்வுக்காக விண்ணப்பித்தேன். அதில் அகில இந்திய அளவில் 2 ஆயிரத்து 180 ஆவது இடத்தில் தேர்ச்சி பெற்றேன். இதில், 50 விழுக்காடு இடங்களை மத்திய அரசும், 50 விழுக்காடு இடங்களை மாநில அரசும் நிரப்புகிறது. இதில் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 விழுக்காடு இடங்களில் உள்ள 25 விழுக்காடு இடங்கள் பணியில் உள்ள இளநிலை அரசு மருத்துவர்களால் நிரப்பப்படுகிறது. எனவே, அந்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் எனக்கு இடம் கிடைக்கும் என நினைத்திருந்தேன்.

ஆனால், அகில இந்திய மருத்துவ விதியின் கீழ் வழங்கப்பட்ட மதிப்பெண்களால் எனக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, தமிழ்நாடு மருத்துவப் படிப்புக்கான இடங்களை அகில இந்திய மருத்துவ விதியின் கீழ், மதிப்பெண்கள் வழங்கி நிரப்பக் கூடாது என உத்தரவிட வேண்டும் " எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பணிபுரியும் இளநிலை மருத்துவர்களுக்கு முதுநிலை நீட் படிப்புகளுக்கான இடங்களை ஒதுக்கும் போது, அகில இந்திய மருத்துவ விதியைப் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் கூடுதலாக எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சம்பா பயிர்களைத் தாக்கும் எலிகள்: கரிசனம் காட்டுமா வேளாண்த்துறை?

Intro:தமிழக மருத்துவ படிப்புக்கான இடங்களை கொள்கை முடிவை அடிப்படையிலேயே நிரப்பவேண்டும் அகில இந்திய மருத்துவ விதியின் கீழ் மதிப்பெண்கள் வழங்கி நிரப்பக் கூடாது என கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:தமிழக மருத்துவ படிப்புக்கான இடங்களை கொள்கை முடிவை அடிப்படையிலேயே நிரப்பவேண்டும் அகில இந்திய மருத்துவ விதியின் கீழ் மதிப்பெண்கள் வழங்கி நிரப்பக் கூடாது என கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

பணிபுரியும் இளநிலை மருத்துவர்களுக்கு முதுநிலை நீட் படிப்புகளுக்கான இடங்களை ஒதுக்கும் போது அகில இந்திய மருத்துவ விதியை பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,"நான் மதுரை மாவட்டம் வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2015 முதல் உதவி அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறேன். முதுநிலை மருத்துவக் கல்வி பயில்வதற்காக நீட் தேர்வுக்காக விண்ணப்பித்தேன். அதில் அகில இந்திய அளவில் 2180 ஆவது இடத்தில் தேர்ச்சி பெற்றேன். 50 சதவீத இடங்களை மத்திய அரசும் 50 சதவீத இடங்களை மாநில அரசும் நிரப்புகிறது. இதில் மாநில அரசின் 50 சதவீத இடங்களும் 25 சதவீத இடங்கள் பணியில் உள்ள இளநிலை அரசு மருத்துவர்களால் நிரப்பப்படுகிறது. பணியில் உள்ள இளநிலை மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் எனக்கு இடம் கிடைக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் விதிப்படி வழங்கப்பட்ட மதிப்பெண்களால் கிடைக்கவில்லை. இதுபோல மதிப்பெண் வழங்குவது அகில இந்திய மருத்துவ விதியின்கீழ் வருகிறது. தமிழக மருத்துவ படிப்புக்கான இடங்களை அகில இந்திய மருத்துவ விதியின் கீழ் மதிப்பெண்கள் வழங்கி நிரப்பக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ பி சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பணிபுரியும் இளநிலை மருத்துவர்களுக்கு முதுநிலை நீட் படிப்புகளுக்கான இடங்களை ஒதுக்கும் போது அகில இந்திய மருத்துவ விதியை பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கில் கூடுதலாக எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.