ETV Bharat / state

மாணவி சந்தேக மரணம்; மறுஉடற்கூராய்வு செய்து ஆதாரங்களை சமர்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! - karur district news

கரூரில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உடலை வீடியோ பதிவுடன் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு மறுஉடற்கூராய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூரில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால்  மறுஉடற் கூராய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு

author img

By

Published : Jun 7, 2023, 11:02 PM IST

மதுரை: கரூர் மாவட்டம் சவரிமேடு கிராமத்தைச் சேர்ந்த கலைவாணி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “என் மகள் (16) கடந்த மே 25ல் திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் கிணற்றில் அவரது உடல் கிடந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் விதிகளை பின்பற்றாமல் உடற்கூராய்வு செய்துள்ளனர். என் மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் என் மகள் மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது. எனவே, விதிகளை பின்பற்றி மறு உடற்கூராய்வு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்”. என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் உடற்கூராய்வு செய்த போது பதிவான சிசிடிவி காட்சிப் பதிவுகளை மனுதாரருக்கு வழங்க வேண்டும். அதைப் பார்த்து மனுதாரர் தரப்பில் பதலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

ஆனால் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வீடியோ பதிவு மனுதாரரிடம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, திருச்சி மருத்துவ கல்லூரி முதல்வர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று நீதிபதி இளங்கோவன் முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மருத்துவ கல்லூரி முதல்வர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில், எதிர் மனுதாரர் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என போலீசார் தரப்பில் விண்ணப்பம் கொடுக்கப்படவில்லை. எனவே நாங்கள் வீடியோ பதிவு செய்யவில்லை என தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில், இறப்பிற்கு முன் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே நீங்கள் மறு உடற்கூராய்வு சோதனை நடத்த விரும்புகிறோம். 10 நாட்களாக மாணவியின் உடல் உடற்கூராய்வு கூடத்தில் உள்ளது என கூறினார்.

இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில், இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். உடற்கூராய்வில் எந்த வன்முறையும் நடைபெறவில்லை. விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனை முழுவதுமாக விசாரித்த, நீதிபதி, ஜூன் 8 ம் தேதி நண்பகல் 12.30 மணி அளவில் மாணவியின் உடலை மறு உடல்கூராய்வு செய்ய உத்தரவிட்டார்.

மேலும் தடயவியல், உடற்கூராய்வு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் வீடியோ பதிவுடன் மறு உடற்கூராய்வு நடத்த வேண்டும் என்றும் அதன் பின் மாணவியின் உடலை உறவினர்கள் பெற்று கொள்ள வேண்டும். மேலும் உடற் கூராய்வின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: மூன்றரை மாதங்களில் போக்சோ குற்றத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை - விருதுநகர் போலீசாருக்கு குவியும் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.