ETV Bharat / state

நகைக்கடன் தள்ளுபடி அரசாணையை ரத்துசெய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி - madurai court dismissed case seeking cancellation of jewelry loan waiver of Government of Tamil Nadu

5 சவரன் விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணையைச் செயல்படுத்த இடைக்காலத் தடைவிதிப்பதோடு, இதனை ரத்துசெய்து உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

court dismissed case seeking cancellation of jewelry loan waiver of Government of Tamil Nadu, தமிழ்நாடு அரசின் நகைக்கடன் தள்ளுபடி ரத்து செய்யக்கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்
தமிழ்நாடு அரசின் நகைக்கடன் தள்ளுபடி ரத்து செய்யக்கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்
author img

By

Published : Feb 9, 2022, 4:42 PM IST

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த லிங்கராஜ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், "2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஐந்து சவரன் விவசாய நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் 2021 நவம்பர் 1ஆம் தேதி 5 சவரன் விவசாய நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. இது அரசுக்குக் கூடுதல் சுமையாகவே அமையும்.

தமிழ்நாடு அரசின் நகைக்கடன் தள்ளுபடி ரத்து

கூட்டுறவு வங்கிகளில் நகையை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் கூட்டுறவு வங்கி இல்லாததால், பலர் பொதுத் துறை வங்கிகளிலேயே நகையை அடகுவைத்துள்ளனர்.

அத்தோடு, வட்டியை முறையாகக் கட்டாதவர்களுக்கே இந்தத் தள்ளுபடி பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை முறைகேடுகள் தொடர்பாக ஏராளமான புகார்களும் உள்ளன.

ஆகவே, 5 சவரன் விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணையைச் செயல்படுத்த இடைக்காலத் தடைவிதிப்பதோடு, இதனை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட இயலாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சர்வதேச அளவில் ஹிஜாப்...! - அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா அதிர்ச்சி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.