ETV Bharat / state

உரிய இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்தியது ஏன்? - ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் கேள்வி!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம், தலையணை மதகு கட்டுவதற்கு கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 9:11 PM IST

மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம், தலையணை மதகு கட்டுவதற்கு கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு 2013ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கக்கோரி தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம், தலையணை மதகு கட்டுமானப்பணிக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்திருந்தது. மேலும், விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காத கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்களுக்கு எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாரத சக்கரவர்த்தி அமர்கள் விசாரணைக்கு வந்தது, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அப்போதைய தஞ்சாவூர், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகினர்.

அப்போது கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்தியது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நிலம் வழங்கிய விவசாயிகள் இழப்பீடு பெறுவது அவர்களது ஜனநாயக உரிமை, மேலும் நீதிபதிகள் தற்போதைய கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. தருமபுரியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.