ETV Bharat / state

நீட் தேர்வு பயிற்சி மைய பண மோசடி - மாநில அரசிடம் விளக்கம் கேட்க நீதிமன்றம் உத்தரவு! - நீட் தேர்வில பண மோசடி

மதுரை: நீட் பயிற்சி மையத்தில் பண மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மாநில அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai high court bench
author img

By

Published : Nov 4, 2019, 11:05 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ’தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் நீட் பயிற்சி வகுப்பு, தமிழ்நாடு முழுவதும் 412 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

அதில் 100 மையங்கள் ஆரம்பம் முதல் செயல்பட்டு வருவதால், மீதமுள்ள 312 இடங்கள் நீட் பயிற்சி மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீட் பயிற்சி மையத்திற்கென்று ஆசிரியர்கள், கணினி பொருட்கள் என அனைத்து வசதிகளுக்கும் அரசு சார்பில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடையநல்லூரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ஏழு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுவிட்டனர் என்று போலி தகவல் தயார் செய்து, தலைமை ஆசிரியர் பண மோசடி செய்துள்ளார். அவ்வாறு, ஆசிரியர்கள் ஏதும் பணிக்கு அமர்த்தவில்லை. இதுகுறித்து, தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் பெற்றும் முறையான சான்று இல்லை.

பண மோசடி குறித்து மனு அளித்தும் தலைமை ஆசிரியர் மீது இன்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வறுமையில் பின்தங்கிய, நல்ல மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்கள் நீட் தேர்வு தோல்வியினால் தவறான முடிவுக்கு வருகின்றனர். எனவே, பண மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Intro:நீட் பயிற்சி மையத்தில் பண மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய
வழக்கில் அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞர்க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:நீட் பயிற்சி மையத்தில் பண மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய
வழக்கில் அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞர்க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பரசுராமன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அதில், தமிழக அரசு பள்ளி கல்வி துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் நீட் பயிற்சி வகுப்பானது தமிழக முழுவதும் 412 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், 100 மையங்கள் தொடக்கம் முதல் செயல்பட்டு வருவதால் மீதமுள்ள 312 இடங்கள் நீட் பயிற்சி மையம் அமைப்பது நடைபெற்றது. நீட் பயிற்சி மையத்திற்கு என அரசு சார்பில் ஆசிரியர், கணினி பொருட்கள் என அனைத்து வசதிகளுக்கு அரசு சார்பில் பணம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடையநல்லூரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் முதுகலை பட்டம் பெற்ற 7 ஆசிரியர்கள் பணி அமர்த்துவிட்டனர் என்று போலி தகவல் தயார் செய்து ஒப்படைத்து தலைமை ஆசிரியர் பண மோசடி செய்துள்ளார். அவ்வாறு, ஆசிரியர்கள் ஏதும் பணி அமார்த்தவில்லை. இதுகுறித்து, தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெற்றும் முறையான சான்று இல்லை. பண மோசடி குறித்து மனு அளித்து தலைமை ஆசிரியர் மீது இன்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வறுமையில் பின்தங்கிய , நல்ல மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்கள் நீட் தேர்வு தோல்வியினால் தவறான முடிவுக்கு வருகின்றனர்.எனவே, பண மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி கல்விதுறை இணை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞர்க்கு உத்தரவிட்டு வழக்கை நாளை நவம்பர் 5 ம் தேதி ஒத்திவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.