நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஷிபா (வயது 30). இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,'எனது தாயார் ரத்தினம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்தார். அவருடன் இருந்த எனக்கு 13 வயதில் இருந்து வலிப்பு நோய் ஏற்பட்டது.
இதற்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுவருகிறேன். இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
அதனைத்தொடர்ந்து எனது வலிப்பு நோயை கருத்தில் கொண்டு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நெல்லை அரசு மருத்துவமனையில் நடந்தது.
அதன்பின் தொடர்ந்து வலிப்பு நோய்க்கு மட்டும் மருந்து, மாத்திரைகளை எடுத்து வந்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து எனக்கு மாதவிடாய் தடைபட்டது. கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது, நான் 17 வாரம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.
இந்த தகவலை கேட்டு, நானும் எனது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தோம். குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகும், கரு உருவாகி இருப்பது எனது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் மீது துறை ரீதியான நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அரசு செலவில் நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் கண்காணிப்பில் எனக்கும் என் வயிற்றில் வளரும் சிசுவுக்கும் தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளர், நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பமான விவகாரம்: சுகாதாரத் துறை செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - சுகாதாரத்துறை செயலாளர்
மதுரை: குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பமான விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளர், நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஷிபா (வயது 30). இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,'எனது தாயார் ரத்தினம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்தார். அவருடன் இருந்த எனக்கு 13 வயதில் இருந்து வலிப்பு நோய் ஏற்பட்டது.
இதற்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுவருகிறேன். இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
அதனைத்தொடர்ந்து எனது வலிப்பு நோயை கருத்தில் கொண்டு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நெல்லை அரசு மருத்துவமனையில் நடந்தது.
அதன்பின் தொடர்ந்து வலிப்பு நோய்க்கு மட்டும் மருந்து, மாத்திரைகளை எடுத்து வந்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து எனக்கு மாதவிடாய் தடைபட்டது. கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது, நான் 17 வாரம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.
இந்த தகவலை கேட்டு, நானும் எனது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தோம். குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகும், கரு உருவாகி இருப்பது எனது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் மீது துறை ரீதியான நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அரசு செலவில் நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் கண்காணிப்பில் எனக்கும் என் வயிற்றில் வளரும் சிசுவுக்கும் தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளர், நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
நெல்லையில் குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பமாளதால் தனக்கும், சிசுவுக்கும் நெல்லை அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சையும்,ரூ.20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர், நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ..Body:குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் கர்ப்பமான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
நெல்லையில் குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பமாளதால் தனக்கும், சிசுவுக்கும் நெல்லை அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சையும்,ரூ.20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர், நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ..
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள ஊர்க்காடு பகுதியை சேர்ந்த ஷிபா (வயது 30), உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், எனது தாயார் ரத்தினம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். அவருடன் வளர்ந்தேன். எனக்கு 13 வயதில் இருந்து வலிப்பு நோய் ஏற்பட்டது.
இதற்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறேன்.இந்த நிலையில் கடந்த 2010 ம் ஆண்டில் எனக்கு திருமணம் நடந்தது. முதலில் ஆண் குழந்தை பிறந்தது. எனது 2 வதாக கர்ப்பமானேன்.
அப்போது நீர்ச்சத்து குறைபாட்டை நீக்கவும், வலிப்பு நோய் சிகிச்சைக்காவும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன்.கடந்த 2014 ம் ஆண்டு ஜூன் மாதம் 17 ந்தேதி 2 வதாக ஆண் குழந்தை பிறந்தது.
அதை தொடர்ந்து எனது வலிப்பு நோயை கருத்தில் கொண்டு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தேன். அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் 4 ந்தேதி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நெல்லை அரசு மருத்துவமனையில் நடந்தது.
அதன்பின் தொடர்ந்து வலிப்பு நோய்க்கு மட்டும் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து எனக்கு மாதவிடாய் தடைபட்டது. கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த போது, நான் 17 வாரம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.
இந்த தகவலை கேட்டு, நானும் எனது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தோம். குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகும், கரு உருவாகி இருப்பது எனது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் மீது துறை ரீதியான நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
அரசு செலவில் நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் கண்காணிப்பில் எனக்கும் என் வயிற்றில் வளரும் சிசுவுக்கும் தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர், நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்..Conclusion: