ETV Bharat / state

கூட்டுறவு சங்க கடன் குறித்து இணையத்தில் வெளியிடக்கோரிய வழக்கு: ஐ.டி. முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

கூட்டுறவு சங்கங்களின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட கடன், அதன் பயனாளிகளின் விவரங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரிய வழக்கில், தகவல் தொழில் நுட்பத்துறை முதன்மைச் செயலர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai-hc-on-releasing-cooperative-fund-details-on-website

author img

By

Published : Jul 2, 2021, 12:23 PM IST

மதுரை: புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் என்ற நபர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "புதுக்கோட்டை நார்த்தாமலை தொடக்க வேளாண்கூட்டுறவு சங்கம் 1,500 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரின்கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகத் தெரிய வருகிறது.

பணிக்காலம் முடிந்தும் பணிபுரியும் அலுவலர்கள்

கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பலர் பணிக்காலத்தின்போது ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். சிலர் பணிக்காலம் முடிந்தும் அலுவலர்களிடம் முறையான அனுமதி பெறாமல் தொடர்ந்து பணியாற்றிவருகின்றனர்.

அத்தோடு கூட்டுறவு சங்க ஊழியர்களின் உறவினர்கள் பலருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாததே இதுபோன்ற முறைகேடுகள் நிகழக் காரணமாக உள்ளது.

இதுகுறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, கூட்டுறவு சங்கங்களின் விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வராது என்று பதிலளிக்கப்பட்டது. கூட்டுறவு சங்கங்களின் கணக்கு வழக்குகளை கணினிமயமாக்கும் பட்சத்தில் அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பல்வேறு திட்டங்களின்கீழ் வழங்கப்பட்ட கடன், அதன் பயனாளிகளின் விவரங்களை, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும்.

மேலும் புதுக்கோட்டை நார்த்தாமலை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்து தொடர்புடைய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தகவல் தொழில் நுட்பத் துறை முதன்மைச் செயலர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யும் கல்வி அலுவலர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.