காதுகேளாதோருக்கான சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீன நாட்டிலுள்ள தைபேயில் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது.
இதில், இந்தியா உட்பட அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 27 நாடுகளிலிருந்து 200-க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவிலிருந்து 25-க்கும் மேற்பட்டோர் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர்.
இப்போட்டியில் இந்தியாவின் சார்பாக அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்றுவரும் ஜெர்லின் அனிகா கலந்துகொண்டு காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டிகளில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமைத் தேடித்தந்துள்ளனர்.