ETV Bharat / state

காந்தி மியூசியம் புனரமைப்பு அறிவிப்பு- காந்திய ஆர்வலர்கள் மகிழ்ச்சி - etv bharat

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பால் காந்திய ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை காந்தி மியூசியம்
மதுரை காந்தி மியூசியம்
author img

By

Published : Aug 15, 2021, 9:46 PM IST

மதுரை: மகாத்மா காந்தியின் நினைவு அருங்காட்சியகம் இன்றைக்கும் மிக கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

மதுரையை ஆண்ட பெண் அரசியான ராணி மங்கம்மாளின் கோடைகால ஓய்வெடுக்கும் அரண்மனையாக திகழ்ந்த கட்டடம்தான் பின்னாளில் காந்தி நினைவு அருங்காட்சியகமாக மாற்றம் கண்டது.

காந்தி நினைவு அருங்காட்சியகம்

கடந்த 1959ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் இந்த நினைவு அருங்காட்சியகம் நாட்டிலேயே முதல்முறையாக தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுதந்திர தின உரையின்போது அறிவித்துள்ளார்.

காந்தி அணிந்திருந்த வேட்டி

இதுகுறித்து காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் இயக்குநர் நந்தாராவ் கூறுகையில், "காந்தியின் நினைவாக இந்தியாவில் தற்போது அமைந்துள்ள ஏழு அருங்காட்சியகங்களில் முதலாவது அருங்காட்சியகம்தான் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம்.

இந்த அருங்காட்சியகத்தில் முதல் பிரிவில் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறும், இரண்டாவது பிரிவில் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறும், மூன்றாவது பிரிவில் அண்ணல் காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காந்தியடிகள் நேரடியாக பயன்படுத்திய 14 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அவர் சுடப்பட்டு இறந்த அந்த இறுதி நாளின் போது அணிந்திருந்த வேட்டி ரத்தக்கறையுடன் இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரது கைப்பட எழுதிய கடிதங்கள் இங்கே உள்ளன.

நான்காவது பிரிவில், காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த புகைப்படங்கள் எல்லாம் இடம் பெற்று உள்ளன. காந்தி மதுரையில் அரையாடை துறந்ததின் 100ஆம் ஆண்டு விழாவும், இந்திய சுதந்திர தினத்தின் 75ஆம் ஆண்டு விழாவும் தற்போது கொண்டாடப்படும் நேரத்தில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சார்பாக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

காந்திய ஆர்வலர்கள் வேண்டுகோள்

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் ஊழியர்கள் ஏறக்குறைய 25க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் அரசின் மானிய தொகையை பொருத்தே இவர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தவிர்க்கும் பொருட்டு இங்கு பணியாற்றும் ஊழியர்களின் நிரந்தர ஊதியத்திற்கு வழி செய்யும் வகையில் குறிப்பிட்ட தொகையை வைப்பு நிதியாக அரசு காந்தி நினைவு அருங்காட்சியகம் பெயரில் உருவாக்கித் தர வேண்டும் என காந்திய ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 75ஆவது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூண் - முதலமைச்சர் திறந்து வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.