ETV Bharat / state

விமானத்தில் கோளாறு காரணமாக அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காத அமைச்சர்கள் - மதுரை விமான நிலையம்

சென்னை அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த மூன்று அமைச்சர்கள், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பினர்.

விமானத்தில் கோளாறு காரணமாக அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காத அமைச்சர்கள்

author img

By

Published : Mar 5, 2022, 10:47 PM IST

மதுரை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 5) மாலை சென்னையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் சென்னைக்கு செல்ல மதுரை விமான நிலையம் வந்திருந்தனர்.

ஏர் இந்தியா விமானத்தில் மதியம் 2 மணி அளவில் அவர்கள் புறப்பட இருந்தனர். இந்நிலையில், விமான ஓடுபாதையிலிருந்து பறக்க இருந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் தரை இறக்கப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதமானது.

இதனால், அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் 2 மணி நேரத்திற்குப் பிறகு மூன்று அமைச்சர்களும் விமானத்திலிருந்து இறங்கி வெளியேறினர். வெளியே வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தான் வெளியே வந்ததாகவும் வேறு எதுவும் பிரச்சினை இல்லை என்றும் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.