மதுரை: பொதுமக்கள் தற்போது செல்போன்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு பயனளிக்கும் வகையில், "யுடிஎஸ் மொபைல்" அப்ளிகேஷன் இந்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ முன்முயற்சியின் ஆதரவுடன் தொடங்கப்பட்டது.
UTS (Unreserved Ticketing System) மொபைல் செயலியானது, முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வாங்க மற்றும் சீசன் டிக்கெட்டுகளை புதுப்பிக்க இப்போது இந்தியா முழுவதும் பயன்படுகிறது. UTS on mobile பயன்படுத்த மிகவும் எளிமையானது. பயன்படுத்த தனி கட்டணம் எதுவுமில்லை.

UTS மொபைல் செயலியை Play/App ஸ்டோரிலிருந்து எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதலில் பயணி தனது மொபைல் எண், பெயர், பிறந்த தேதி, கடவுச்சொல், பாலினம் ஆகியவற்றைக் கொடுத்து UTS செயலியில் பதிவு செய்ய வேண்டும். வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டவுடன், பயணிகளுக்கு பூஜ்ஜிய இருப்புடன் ரயில்வே வாலட் (R-வாலட்) தானாகவே உருவாக்கப்படும். R-Wallet -ஐ உருவாக்கக் கூடுதல் செலவு இருக்காது. R-Wallet -ஐ UTS செயலி மூலமாகவோ அல்லது பயணசீட்டு அலுவலகத்திலோ விருப்பதின் அடிப்படையில் ரீசார்ஜ் செய்யலாம்.
R-வாலட்டை ரீசார்ஜ் செய்யும் போது, ரீசார்ஜ் மதிப்புக்கு 3% போனஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஜிபே (Gpay), யூபிஐ (UPI) போன்ற மிண்ணனு பணபரிவர்த்தனை வசதிகளையும் பயன்படுத்தி பயணச்சீட்டு பதிவு செய்யலாம். பயணம் துவங்கும் ரயில் நிலையம், செல்ல வேண்டிய ரயில் நிலையம், ரயில் வகை மற்றும் பணம் செலுத்தும் முறை போன்றவற்றை நாமே உள்ளீடு செய்து எளிதாக பயணச்சீட்டு பெறலாம். பயணிகள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, R-வாலட், நெட் பேங்கிங் மெக்கானிசம் மற்றும் UPI மூலம் பணம் செலுத்தலாம்.

இந்த செயலி மூலம், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை இருப்புப்பாதையிலிருந்து 15 மீட்டருக்கு அப்பால் இருந்து பெற முடியும். ஆனால் ரயில் நிலைய எல்கைக்குள் வந்த பிறகும் யுடிஎஸ் மொபைல் செயலியை பயன்படுத்தி ரயில் நிலையத்தில் ஒட்டப்பட்ட QR குறியீடு ஸ்கேன் செய்து, தேவையான தகவல்களை உள்ளிட்டு பயணசீட்டு பெறலாம்.
50 சதவீத பயணிகள் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு, பிளாட்பார்ம் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை இந்த செயலி மூலம் நீண்ட நேரம் காத்திருக்காமல் சிரமமின்றி பயணச்சீட்டு பதிவு செய்கிறார்கள். மீதமுள்ள 50 சதவீத பயணிகளும் இந்த எளிய பயணச்சீட்டு பதிவு செய்யும் முறைக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, இந்திய ரயில்வே தற்போது அறிமுகம் செய்துள்ள UTS புதிய செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வாங்குபவர்களுக்கு சலுகை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான கப்பல் சேவை நாளை முதல் நிறுத்தம்.. காரணம் என்ன?