ETV Bharat / state

வருமான வரி சோதனையின்போது அதிகாரிகளை தாக்கிய வழக்கு நாளை ஒத்திவைப்பு! - income tax

கரூரில் கடந்த மே 25ல் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது, அதிகாரிகளை தாக்கியது, ஆவணங்களை எடுத்துச் சென்றது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் ரத்து செய்யக்கோரிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

madurai high court
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By

Published : Jul 20, 2023, 6:03 PM IST

மதுரை: வருமான வரித்துறையின் உதவி இயக்குநர் கிருஷ்ணகாந்த், துணை இயக்குநர் யோக பிரியங்கா, ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசராவ் மற்றும் காயத்ரி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், "எங்களின் ஆவணங்களில் உள்ள முகாந்திரத்தில் அடிப்படையில் கடந்த மே 25ஆம் தேதி அசோக் குமார், மாரப்ப கவுண்டர் குணசேகரன், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோரது வீடுகளில் சோதனை செய்தோம். சோதனை தொடர்பாக முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணமும், ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

சுமார் 11 மணியளவில் சோதனை நடைபெற்ற இடங்களுக்கு வெளியே ஏராளமானோர் கூடியிருந்தனர். நாங்கள் சோதனை செய்த உரிமையாளர்களிடம் கூட்டத்தை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு தெரிவித்தோம். வெளியே கூடி இருந்த நபர்கள் மோசமான வார்த்தைகளில் வருமான வரித்துறையினரை பேசினர். சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த கூட்டம், வருமானவரித் துறையினரை தாக்கியதோடு, எங்களுக்கு சொந்தமான மடிக்கணினி, பென்டிரைவ் மற்றும் பணத்தை எடுத்துச்சென்றனர்.

5 பென் டிரைவ்களிலும் அரசுக்குச் சொந்தமான முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிகழ்வு நடந்த போது காவல்துறையினரின் உதவி எதுவும் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. கூட்டம் அதிகரிக்கவே, அதிகாரிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அந்தந்த இடங்களை விட்டு வெளியேறினோம். மறுநாள் சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உதவியுடன் சோதனையை தொடர்ந்தோம்.

எங்களிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பென் டிரைவ்கள், மடிக்கணினி திரும்ப வழங்கப்பட்டது. இருப்பினும் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திரும்ப வழங்கப்படவில்லை. பென் டிரைவை பரிசோதித்தபோது அதிலிருந்து தரவுகள் அழிக்கப்பட்டிருந்ததோடு பென்டிரைவ் பார்மட் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கரூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன், முன் ஜாமீன் கோரிய நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வருமானவரித்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அதனை கருத்தில் கொள்ளாமல், கீழமை நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன், முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, மோசமான வார்த்தைகளால் திட்டியது, அவர்களின் ஆவணங்களை எடுத்துச் சென்றது, தரவுகளை அழித்தது உள்ளிட்டப் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட அவர்களுக்கு கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே, வழக்கில் கைது செய்யப்பட்ட 19 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன், முன் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் அப்போது எதிர் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில்; மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால், வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கால அவகாசம் கோரினர். இதைத்தொடர்ந்து நீதிபதி வழக்கு விசாரணையை, நாளை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:சென்னை மாநகராட்சிக்கு எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம்: 10 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் எனவும் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.