திருநெல்வேலி டவுன் அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
இதனையடுத்து பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வுசெய்யப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டர்.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகளில் 200 பள்ளி கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்ட நடவடிக்கையாகச் சேதமடைந்த கட்டடங்கள் அருகே மாணவர்கள் செல்லாத வகையில் பாதுகாப்பு அமைக்கப்பட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஐந்து நாள்களுக்குள் சேதமடைந்த கட்டடங்களை இடித்து மாற்று ஏற்பாடுகள் செய்யவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி விபத்து எதிரொலி: புதுக்கோட்டையில் 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க ஆட்சியர் அதிரடி