மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அழகுசிறை கிராமத்தில் இயங்கி வந்த VBM என்ற பட்டாசு தொழிற்சாலையில் நேற்று கோர விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 13க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
உயிரிழந்த அப்பாவி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஆலை உரிமையாளர் அனுசியா என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அனுசியாவின் கணவர் வெள்ளையப்பன், ஆலை மேலாளர் பாண்டி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: லண்டன் மாநாட்டில் தமிழ்நாடு சுற்றுல்லா துறை அரங்கு