மதுரை: திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றுவர் வீரகாந்தி. இவர் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்பிணை கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வீரகாந்தி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர், "பணியிட பாதுகாப்பு என்பது பெண்களின் சட்டப்படியான உரிமை. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கவே தனிச் சட்டமும் கொண்டு வரப்பட்டது.
ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள உயர் அலுவலர்களுக்கே இந்த நிலை என்றால், எஸ்.ஐ மற்றும் காவலர்கள் அந்தஸ்தில் கீழ் நிலையில் உள்ளவர்களால் எப்படி புகார் அளிக்க முடியும். வழக்குப்பதிவு செய்வதால் மட்டுமே இழிவு நீங்கி விடாது. ஆண்களுக்கு அடுத்தபடியாகவே, பெண்களை பார்ப்பது வருந்தக் கூடியதே.
மனுதாரர் மீதான குற்றச்சாட்டில் போதிய முகாந்திரம் உள்ளது. மனுதாரர் மீதான புகாரை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. விசாரணை நிலுவையில் உள்ளதால், தற்போதைய நிலையில் முன்பிணை வழங்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்