ETV Bharat / state

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை: பேராசிரியருக்கு நிபந்தனையுடன் ஜாமின் - மதுரை ஐகோர்ட் உத்தரவு!

Kanyakumari Medical College Student suicide: கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மருத்துவக்கல்லூரி பேராசிரியருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Kanyakumari Medical College Student suicide
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 6:12 PM IST

மதுரை: கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மருத்துவக்கல்லூரி பேராசிரியருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது மாணவி ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் பிரிவில், கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரி மாணவி விடுதியிலேயே இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டதையடுத்து, அந்த அறையைச் சோதனை செய்த போது அங்கு ஊசியும் மருந்து பாட்டிலும் இருந்தது. அது தசைகளைத் தளர்வு அடையச் செய்யும் மருந்து என விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பாக மருத்துவக் கல்லூரி மாணவி எழுதி வைத்த கடிதத்தில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர், மருத்துவ மேற்படிப்பு மாணவர் மற்றும் மாணவி ஆகியோர் தான் தனது மரணத்திற்குக் காரணம் எனவும் எழுதி வைத்திருந்த கடிதமும் கிடைத்தது.

அதன் அடிப்படையில் காவல்துறை இந்த 3 பேரும் மீது வழக்குப்பதிவு செய்து மருத்துவ பேராசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மருத்துவ மேற்படிப்பு மாணவர் மற்றும் மாணவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே முன் ஜாமீன் வழங்கிய நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேராசிரியர் தனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில், வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். எனவே, மருத்துவ பேராசிரியருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி, மருத்துவக்கல்லூரி பேராசிரியருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மூத்த தலைவர் என்.சங்கரய்யா மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.