ETV Bharat / state

மதுரை தீவிபத்து: பழமையான கட்டடங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் - பழை கட்டடங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

மதுரை: ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த தீ விபத்து காரணமாக பழமையான கட்டடங்களுக்கு மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

madurai
madurai
author img

By

Published : Nov 23, 2020, 8:31 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று தீ விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. தீபாவளி தினத்தன்று (நவ.14) ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள், கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர். இதற்கு அந்த ஜவுளிக்கடை பழமையான கட்டடத்தில் இயங்கியதுதான் காரணம் எனத் தெரியவந்தது.

இதனையடுத்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத் துறையின் ஐஜி ஜாபர் சேட், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பழமையான கட்டடங்கள் குறித்து ஆய்வுசெய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பழமையான கட்டடங்கள் குறித்தும் ஆய்வுநடத்தப்பட்டு, முதற்கட்டமாக 500 வணிக நிறுவனங்களுக்கு தீயணைப்புத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி சார்பில், மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பழமையான கட்டடங்கள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டது. இதில் 60 முதல் 90 ஆண்டுகள் பழமையான சுமார் 125 கட்டடங்கள் கண்டறியப்பட்டு முதற்கட்டமாக 65 கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டடங்களைப் புனரமைத்து அல்லது புதிய கட்டடங்கள் அமைக்காதபட்சத்தில் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை கிரானைட் முறைகேட்டில் சகாயம் கணக்கு தவறா? - குவாரி உரிமையாளர்கள் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.