மதுரா கோட்ஸ் - தமிழ்ச்சங்கம் சாலைகளை இணைக்கும் கோட்ஸ் மேம்பாலத்தில் சாலைகள் மோசமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் விஜயராஜன், 'மதுரை மாநகராட்சி 100 வார்டுகளை உள்ளடக்கியதாகும், தற்போது இவை அனைத்திலும் அடிப்படை வசதிகள் கூட செய்யாமல் மாநகராட்சி நிர்வாகம் செயலிழந்து கிடக்கிறது. அண்ணா பேருந்து நிலையம், அண்ணா நகர், பெரியார் பேருந்து நிலையம், கட்டபொம்மன் சிலை இதனைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன' என்றார்.
மேலும், 'பாதசாரிகள், வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. ஆகவே மதுரை மாநகர் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை மாநகராட்சி உடனடியாக சரி செய்ய வேண்டும்' என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இதையும் படிங்க: பாதைகேட்டு சடலத்துடன் திடீர் சாலைமறியல் !