ETV Bharat / state

பாலியல் தொந்தரவுக்குள்ளான மாணவிகள் புகார் அளிக்க மதுரை காவல் துறை வேண்டுகோள்!

author img

By

Published : May 13, 2020, 2:06 PM IST

மதுரை: நரிமேடு பகுதியில் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதையடுத்து, பாதிக்கப்பட்டோர் புகாரளிக்க மாநகரக் காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம்
மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம்

மதுரை செல்லூர் நரிமேடு பகுதியைச் சேர்ந்த சிலரால், அந்தப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அதனை வீடியோ எடுத்து மாணவிகளை மிரட்டியதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இந்நிலையில், இதுபோன்ற குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் விதமாக, மாநகர காவல் ஆணையர் தலைமையில், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு, விபச்சார தடுப்புப் பிரிவு ஆய்வாளர்களை உள்ளடங்கிய தனிப்பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அல்லது பாதிக்கப்பட்ட பெண்கள் 83000 17920 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் கொடுத்தவர் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க: ஈடிவி பாரத் செய்திகள் எதிரொலி: ம.பி.யிலிருந்து காரைக்கால் மாணவர்கள் 17 பேர் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.