மதுரை அரசரடி இறையியல் கல்லூரி மைதானத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், இஸ்லாமிய பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக்கோரி காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாங்கள் விடியவிடிய தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் அறிவித்திருந்த நிலையில், காவல் துறை சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது எனக் கூறி போராட்டத்திற்குச் செல்பவர்களை தடுத்துநிறுத்தினர். இதனால் மைதானத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து துணை ஆணையர் கார்த்திக் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்துசெல்ல பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைடுத்து 12 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.