ETV Bharat / state

மதுரையில் ஜல்லிக்கட்டுத் திருவிழா - மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் ரெடி - அலங்காநல்லூர் வாடிவாசலை ஆய்வு செய்த ஆட்சியர் வினய்

மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டியில் களமிறங்கும் மாடு பிடி வீரர்களுக்கு டோக்கனும் ஜன. 13ஆம் தேதி காளைகளுக்கு டோக்கனும் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.

jallikkattu
jallikkattu
author img

By

Published : Jan 9, 2020, 9:29 PM IST

மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காளைகள் செல்லும் பாதை, வாடிவாசல், மாடுகள் வந்து சேருமிடம் ஆகியவற்றை மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார்

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ' ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு அங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலை 7 மணி முதல் முன்பதிவு செய்து டோக்கன் வழங்கப்படும். 13ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு முன்பதிவு டோக்கன் வழங்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் உள்ள குளறுபடிகள் போல் இல்லாமல், இந்தண்டு 700 காளைகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் ' என்று தெரிவித்தார்.

மதுரையில் ஜல்லிக்கட்டுத் திருவிழா

'சிஏஏ நிறைவேறியதற்கு காரணமே அதிமுகவும் பாமகவும் தான்' - திருமாவளவன்

மேலும், 'ஜல்லிக்கட்டுப் போட்டி குறிப்பிட்ட நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டு, 700 காளைகளும் போட்டி முடிவதற்குள் அனுமதிக்க நடவடிக்கையும் எடுக்கப்படும்' என்றார்.

Intro:*09 தேதி மாடு பிடி வீரர்களுக்கு டோக்கனும் 13ம் தேதி காளைகளுக்கு டோக்கன் கொடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் வினய் பேட்டி*Body:

*09 தேதி மாடு பிடி வீரர்களுக்கு டோக்கனும் 13ம் தேதி காளைகளுக்கு டோக்கன் கொடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் வினய் பேட்டி*

மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் ஆய்வு,

மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15, ல் அவனியாபுரம், 16ல் பாலமேடு, 17ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற உள்ளன

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காளைகள் செல்லும் பாதை, வாடிவாசல், மாடுகள் வந்து சேரும் இடம் ஆகியவற்றை மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அவர்கள் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கேட்டறிந்தார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் வினய் பேசியதாவது:

10, 11, ம் தேதிகளில் ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு அங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் காலை 7 மணி முதல் முன்பதிவு செய்து டோக்கன் வழங்கப்படும்

13ம் தேதி ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு முன்பதிவு டோக்கன் வழங்கப்படும் என்றார்

கடந்தாண்டு நடந்த ஜல்லிகட்டு போட்டியில் உள்ள குளறுபடிகள் போல் இல்லாமல்

இந்தண்டு 700 காளைகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் என்றார்

போட்டி காலை 8 மணிக்கு தொடங்கும் 700 காளையும் போட்டி முடிவதற்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.