மதுரை வண்டியூரை சேர்ந்த மூதாட்டி லெட்சுமி. இவரது கணவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிழந்துள்ளார். இவருக்கு கேசவன், முருகவேல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், மூதாட்டி லெட்சுமி தனக்கு சொந்தமான வீட்டை விற்று இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்துள்ளார். மேலும், தனது வங்கி கணக்கில் இரண்டு லட்சம் ரூபாய் வைத்துள்ளார். இதனை, மூதாட்டி லெட்சுமியின் வங்கி கணக்கில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது மகன்கள் ஏடிஎம் மூலமாக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவரிடம் இருந்த 10 சவரன் நகையையும் வாங்கி கொண்டதாக மூதாட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில் மூதாட்டியின் மகனும், மருகளும் உணவு சரிவர வழங்காமல், அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதனால், செய்வதறியாமல் இருந்த மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரை சந்தித்து நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து, தாயை வீட்டை விட்டு துரத்திய மகன்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : உள்ளாட்சித் தேர்தல்; தெலுங்கர் கூட்டமைப்பு திமுகவுக்கு ஆதரவு!