ETV Bharat / state

மதுரையில் இருந்து விடைபெற்றார் கள்ளழகர் - பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலைக்கு புறப்பட்டார்! - கள்ளர் திருக்கோலத்துடன் கள்ளழகர்

சித்திரைத் திருவிழாவுக்காக மதுரை வந்த கள்ளழகர் இன்று அதிகாலை பூப்பல்லக்கில் அழகர்மலைக்குப் புறப்பட்டார். வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை வணங்கி கோவிந்தா எனும் கோஷம் எழுப்பியபடி வழியனுப்பி வைத்தனர்.

madurai-chithirai-thiruvizha-2022-kallalagar-poopallaku மதுரையில் இருந்து விடைபெற்றார் கள்ளழகர் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்

author img

By

Published : Apr 19, 2022, 4:44 PM IST

மதுரை: உலகப்புகழ்பெற்ற சித்திரை திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மதுரையின் அரசி மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்றது. மீனாட்சிக்கும் - சுந்தரேஸ்வரருக்குமான திருக்கல்யாணம் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் வெகு விமரிசையாக பக்தர்கள் முன்னிலையில் ஏப்.14இல் நிகழ்ந்தது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல், மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் வைபவம் ஆகியவற்றுக்காக கடந்த 14ஆம் தேதி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் திருமாலிருஞ்சோலையில் இருந்து மதுரை புறப்பட்டார். வழிநெடுகிலும் சுமார் 450க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி, மதுரை வந்த கள்ளழகரை தல்லாகுளத்தில் பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்வு நடைபெற்றது.

கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர்மலைக்கு புறப்பட்டார்

அதனைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும், இதனைத்தொடர்ந்து வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், ராமராயர் மண்டகப்படியில் தசாவதாரம் நிகழ்வும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 11 மணியளவில் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அனந்தராயர் பல்லக்கில் அராசாங்க திருக்கோலத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் எழுந்தருளிய கள்ளழகரை "கோவிந்தா" எனும் கோஷம் முழங்கிட பல்லாயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மதுரையில் இருந்து விடைபெற்றார் கள்ளழகர்
மதுரையில் இருந்து விடைபெற்றார் கள்ளழகர்

இதனையடுத்து அருள்மிகு கருப்பணசுவாமி கோயில் சந்நிதியில் எழுந்தருளியதைத்தொடர்ந்து, அழகர் மலைக்கு புறப்பட்ட கள்ளழகரை பக்தர்கள் மனமுருக வணங்கி வழியனுப்பி வைத்தனர். முன்னதாக பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை தரிசிக்கத் தமுக்கம் பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் நேற்று இரவு முதலே குவிந்திருந்தனர்.

பூப்பல்லக்கில் புறப்பாடான கள்ளழகர் வழிநடையாக புதூர், மூன்று மாவடி, சுந்தரராஜன்பட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, வழியாக வரும் 20ஆம் தேதி அழகர் மலை வந்து சேருகிறார். அதனைத்தொடர்ந்து வரும் 21ஆம் தேதி அழகர்கோயிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

இதையும் படிங்க: வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்: கோவிந்தா.. கோவிந்தா என்று மனமுருகி முழங்கிய மக்கள்; சிலிர்த்துப்போன வெளிநாட்டவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.