மதுரை கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டி என்ற இளைஞர் குடிபோதையில் சொகுசு காரை சாலையில் தாறுமாறாக ஓட்டிவந்தார். அப்போது கார் கிருஷ்ணாபுரம் காலனி பிரதான சாலையோர பழக்கடையை இடித்து, தள்ளிவிட்டு அருகிலுள்ள டெலிஃபோன் கம்பத்தில் மோதியது. இதில் பழக்கடை நடத்திய பெண் காயமடைந்தார்.
குடிபோதையில் காரை ஓட்டி வந்த இளைஞரைப் பிடித்த பொதுமக்கள் சராமரியாக அடித்து உதைத்தனர். மேலும் சங்கரபாண்டியை பிடித்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
லேசான காயத்துடன் உயிர் தப்பிய பெண் ராஜேஸ்வரி 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். குடிபோதையில் காரை ஓட்டிய குற்றத்திற்காக சங்கரபாண்டி மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சுற்றுப்புறத்தை பாதுகாத்தல் குறித்து கல்லூரி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி!