மதுரை - ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே கரிமேடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட காவலர்கள் நேற்று(அக்.5) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில், 22 கிலோ கஞ்சா மூட்டைகள் சட்ட விரோதமாக கொண்டு செல்வது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய பாண்டியம்மாள் (45), நாகம்மாள் (75), ராஜாமணி (50), பிரதீப் (30), விக்னேஷ் (29) ஆகிய ஐந்து பேரைக் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த மூன்று இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களை கரிமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடம் ரூ.2 கோடி அபராதம்!