ETV Bharat / state

செப்டிக் டேங்க் கிளீனிங் பணியில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க மதுரை கிளை உத்தரவு - செப்டிக் டேங்க் கிளீனிங்

மதுரை: கோச்சடையில் உள்ள குடியிருப்பில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி செப்டிக் டேங்க் கிளீனிங் பணியின் போது உயிரிழந்த சோலை நாதன் வழக்கில் உரிய இழப்பீடு வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிளை
மதுரை கிளை
author img

By

Published : Sep 6, 2020, 3:51 PM IST

மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 2016ஆம் ஆண்டு சோலைநாதன் என்பவருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. நாங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். நான் மூன்று மாத கர்ப்பமாக இருந்தேன். எனது கணவர் பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

6.08.2016 அன்று காலை 9.30 மணிக்கு கோச்சடையில் உள்ள சாந்தி சதன் குடியிருப்பில், அங்குள்ள சங்க நிர்வாகி என் கணவருக்கு போன் செய்து செப்டிக் டேங்க் கிளீனிங் பணிக்கு அழைத்துச் சென்றார். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. செப்டிக் டேங்க் கிளினிங் பணி மேற்கொண்டிருந்த போது எனது கணவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் கையால் மலம் அள்ளும் அவலத்திற்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து எனக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, எனது வாழ்வாதாரத்திற்கான அரசு வேலையோ, எந்தவிதமான உதவிகளும் வழங்கப்பட வில்லை.

எனவே கையால் மலம் அள்ளும் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் மறுவாழ்வு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுவை மதுரை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து சட்டப்படி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.