ETV Bharat / state

அடுத்த சர்ச்சை.. ஈவிகேஎஸ் இளங்கோவனை தாக்கினால் சன்மானம்..பாஜக பகிரங்க மிரட்டல் - பாஜக மதுரை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள்

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரைக்கு வந்தால் அவரை தாக்குபவருக்கு பாஜக சார்பில் பணம் வழங்கப்படும் என பாஜக மதுரை மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

பாஜக மதுரை மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் பேட்டி

author img

By

Published : Nov 28, 2021, 6:42 PM IST

மதுரை: பாஜக மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (நவ.28) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பேருந்து நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்து அதன் தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடியை அழைக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத தமிழ்நாடு அரசுக்கு கண்டனம், மத்திய அரசு நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பிரதமரின் புகைப்படம் இல்லாமல் செயல்படுத்தினால் அரசு அலுவலக முற்றுகை போராட்டம், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் அவலநிலையை கண்டித்தல் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் பெயர் மாற்றப்படவேண்டும்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மதுரை மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் கூறுகையில், "முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். ஆனால் 138 அடியிலேயே இரவோடு இரவாக தமிழ்நாடு அரசு, கேரள அரசுடன் களவாணி தனமாக கைகோர்த்து திறந்து விட்டது.

பாஜக மதுரை மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் பேட்டி

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததையடுத்து, 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு அரசு குறைக்கவில்லை. விடியல் அரசு என்று கூறிவிட்டு மக்களுக்கு விடியல் இல்லா அரசாக உள்ளது. இதனைக் கண்டித்து இந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம். நான்கு வழிச்சாலை கொண்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மதுரை விரகனூர் பகுதியில் வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்றார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் பெயர் மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பலர் தங்களது பெயரை காலப்போக்கில் மாற்றுகின்றனர். அந்தவகையில் பேருந்து நிலையம் பெயர் மாற்றுவதால் எந்த பிரச்சினையும் இல்லை. மதுரை கோயில் நகரம் எனவே முதலமைச்சர் இதைப் பரிசீலிக்க வேண்டும்.

ஈவிகேஎஸ் இளங்கோவனை தாக்குபவர்களுக்கு பணம்

தமிழ்நாடு இந்தியாவிற்குள் தான் உள்ளது மத்திய அரசை சார்ந்தே மாநில அரசு உள்ளது. அதனால் மத்திய அரசு சார்ந்து உள்ள திட்டங்களை தொடக்கி வைக்க பிரதமர் மோடியை அழைக்க வேண்டும். மாநில அரசுக்கு மத்திய அரசு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யும். எதிர்க்கட்சியாக இருப்பதால் ஒதுக்கி வைக்காது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் அகதி, அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி அவரை புறந்தள்ளி மறந்துவிட்டது. அவர் அரசியலில் உள்ளார் என்பதைக் காண்பிப்பதற்காகவே இப்படி பேசியுள்ளார். ஜெய் பீம் படத்திற்கு சூர்யாவுக்கு எதிராக சர்ச்சைகள் எழுந்தபோது, அவரை தாக்குபவருக்கு பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரையில் கால் வைத்தால் அவரை தாக்குபவர்களுக்கு பணம் வழங்கப்படும் என மதுரை பாஜக சார்பில் அறிவிக்கிறோம்" என்றார்.

வைகோ, திருமா குறித்து விமர்சனம்

மேலும், திமுக அமைச்சர் கே.என்.நேரு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்து அவதூறாக பேசியது குறித்த கேள்விக்கு, "ட்விட்டரில் அரசியல் செய்யும் மாற்று கட்சியை சேர்ந்தவராக சு.வெங்கடேசன் இருந்தாலும் அவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், அவரை அவதூறாக பேசியதை மதுரை பாஜக கண்டிக்கின்றது.

கூட்டணி கட்சிகள் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும். சு.வெங்கடேசன் தமிழ் குறித்து பல்வேறு கடிதங்களை மத்திய அமைச்சர்களுக்கு அனுப்புகிறார். ஆனால் இந்த சம்பவத்திற்கு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவிக்கவில்லை. கூட்டணி கட்சி என்பதால் பேசாமல் உள்ளார். வைகோ மற்றும் திருமாவளவன் மக்களுக்காக போராடவில்லை. ஓட்டு வங்கிக்காக மட்டுமே கூட்டணி வைத்து செல்கின்றனர்" என்று விமர்சித்தார்.

இதையும் படிங்க: நெல்லை மழை பாதிப்புக்கு அரசு நிதி இல்லாததே காரணம் - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதிர்ச்சித் தகவல்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.