ETV Bharat / state

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை யார் நடத்துவது? - உயர் நீதிமன்றக்கிளை இன்று தீர்ப்பு!

Avaniyapuram Jallikattu Case: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து கமிட்டி அமைத்து போட்டி நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குவதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

Avaniyapuram jallikattu case
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 8:06 AM IST

மதுரை: அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் உள்ளிட்ட சிலர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அவனியாபுரத்தில் பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட சில சமுதாயத்தினர் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இது தொடர்பான ஒரு வழக்கில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடங்கிய குழு அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டில், அனைத்து சமூகத்தினரையும் கொண்ட விழா கமிட்டியே ஜல்லிக்கட்டு நடத்துகிறது. அவனியாபுரத்தில் மட்டும் மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது. ஜனவரி 15ஆம் தேதி நடக்கவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, அனைத்து சமூகத்தினரையும் கொண்ட குழு அமைத்து நடத்துமாறு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து சமாதான கூட்டம் நடத்தி, அனைவரின் கருத்துக்களையும் கேட்டு அறிக்கையளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அமர்வுக்கு முன் நேற்று (ஜன.11) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, “ஆர்டிஓ தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. அனைத்து சமூகத்தையும் சேர்ந்த 98 பேர் பங்கேற்றனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தவிர்த்திடும் வகையில், மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டை நடத்துவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை எனப் பெரும்பான்மையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுவும், ஆலோசனைகளை வழங்க அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஆலோசனைக்குழுவும் அமைத்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக” கூறப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஜன.12) வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வகுப்பறைகளில் செயற்கை நுண்ணறிவு - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.