மதுரை: சென்னையை சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ”நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் அல்லது மாற்று வழியில் கொண்டு செல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.
சிறப்பு பொருளாதார மண்டலம்
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ”இந்த வழக்கில் இரு தரப்பினரையும் சமநிலையில் கொண்டு செல்ல வேண்டியது உள்ளது. நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் தொழிற்சாலைகள் அமைப்பதற்கும், தொழில் முதலீடுகளை ஈர்பதற்குமான ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக உள்ளது.
டான்ஜெட்கோ 39 ஆவது இடம்
மின் வாரியமும், தொழில் துறையும் இணைந்து செயல்பட்டால் தான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பு இல்லாமல் தொழில்துறை வளர்ச்சி என்பது இருக்காது. மத்திய எரிசக்தி துறையின் தற்போதைய அறிக்கையின்படி மொத்தமுள்ள 41 மின் சக்தி நிறுவனங்களில், தமிழ்நாட்டின் டான்ஜெட்கோ 39ஆவது இடத்தில் 'சி' கிரேடில் உள்ளது.
உத்தரவு பிறப்பிக்க இயலாது
இந்த அறிக்கை, தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியாக நாம் கருத வேண்டும். எனவே இந்த சூழலில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மனுதாரர் மின் துறையை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது?