ETV Bharat / state

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிபிஐக்கு மாற்றம்
சிபிஐக்கு மாற்றம்
author img

By

Published : Jan 31, 2022, 1:42 PM IST

மதுரை: தஞ்சாவூர் அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்து அரியலூரைச் சேர்ந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரி மாணவியின் தந்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி, தூய இருதய அன்னை சபை தலைமை சகோதரி தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பாக இன்று(ஜன.31) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சாலை விபத்தில் காயமடைந்தவரை காப்பாற்றிய அமைந்தகரை காவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.