ETV Bharat / state

"பக்தர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்" - திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றக்கிளை பாராட்டு!

Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயிலில் விபூதி மற்றும் தேங்காய் உடைக்கும் இடத்தை மாற்றம் செய்ததற்கு எதிரான வழக்கில், பக்தர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 8:14 AM IST

மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விபூதி கொடுக்கும் மற்றும் தேங்காய் உடைக்கும் இடம் சன்னதிக்கு அருகே மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வீரபாகு மூர்த்தி தாக்கல் செய்த மனுவில், “முருகனின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. கோயிலுக்கு வரும் ஆயிரக்கக்காண பக்தர்களுக்கு தற்போது மகா மண்டபத்தில் பக்தர்கள் கொண்டு வரும் அர்ச்சனை தேங்காய் உடைக்கப்பட்டு வருகிறது. சன்னதியில் மயில் தேவர் சிலை முன்புறத்தில் பக்தர்களுக்கு விபூதி வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் வரிசையில் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. விபூதி கொடுக்கும் இடமும் தேங்காய் உடைக்கும் இடம் பாரம்பரிய முறைப்படி ஏற்கனவே இருந்தபடி சந்நதிக்கு அருகே மாற்றம் செய்யப்பட்ட வேண்டும். ஆனால், விபூதி மற்றும் தேங்காய் உடைக்கும் இடத்தை கோயில் இனை ஆணையர் இட மாற்றம் செய்துள்ளார். இதனை ரத்து செய்ய வேண்டும்” என கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று (நவ.16) நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில், “ஆண்டுதோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும், திருச்செந்தூர் கோயிலை தூய்மையாக வைத்து உள்ளனர். அதற்கு கோயில் நிர்வாகத்தைப் பாராட்ட வேண்டும்.

மேலும், பக்தர்களுக்கு விபூதி கொடுப்பதில் கோயில் நடைமுறைகள், பக்தர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். விபூதி கொடுக்கும் இடம் சன்னதியில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி கொடுத்தால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியும். எனவே இது குறித்து மனுதாரர் தரப்பில் எந்த இடம் என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” என கூறிய நீதிபதி, விரிவான வாதத்திற்காக நவம்பர் 24ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சென்னையில் தொடரும் வருமான வரித்துறை சோதனை.. குறி வைப்பது யாருக்கு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.