ETV Bharat / state

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளுக்கு தங்க அங்கி: பக்தர்களிடம் நன்கொடையாக பெற வழிகாட்டிய நீதிமன்றம் - madurai bench Gold suit for Thiruvattar Adikesava Perumal

மதுரை: திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருடப்பட்டு மீண்டும் பறிமுதல்செய்யப்பட்ட நகையிலிருந்து மூலவருக்கு தங்க அங்கி செய்து அணிய கோரிய வழக்கில், பக்தர்களிடம் நன்கொடையாகப் பெற்று தங்க அங்கி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

madurai bench
நீதிமன்றம்
author img

By

Published : Mar 9, 2021, 5:54 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் அறமண்ணத்தைச் சேர்ந்த ரவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்துள்ளார். அதில், "கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் 3500 ஆண்டுகள் பழமையானது.

மன்னர் பரம்பரை நிர்வாகத்தின்கீழ் இருந்த இக்கோயிலானது, சுதந்திரத்திற்குப் பிறகு திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் பல கோடி மதிப்புள்ள நகைகள் உள்ளன. இந்தக் கோயிலில் இரண்டு முறை நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்த நகைகளில் சில மீட்கப்பட்டு மாவட்ட நீதிமன்றம், கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் பல ஆண்டுகளாக குடமுழுக்கு நடத்தப்படாமல் உள்ளது.

தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு குடமுழுக்கை நடத்த வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஏதும் நடக்காமல் தற்போது 2021ஆம் ஆண்டு உத்திராயணம் முடிவுக்கு வருவதற்கு முன்பாக குடமுழுக்கு நடத்தப்பட வேண்டுமென பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில் வரும் ஜூன் மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. எனவே, நீதிமன்ற பாதுகாப்பிலும், அரசு கருவூலத்திலும் வைக்கப்பட்டுள்ள நகைகளைப் பெற்று மூலவராகிய ஆதிகேசவப் பெருமாளுக்கு தங்க அங்கி பழமை மாறாமல் செய்யவும், இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும், கோயில் நகைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கோயிலில் உள்ள மூலவருக்கு தங்க அங்கி செய்வதற்கு மீதம் உள்ள தங்கத்தை மனுதாரர் வழங்கலாம் அல்லது பக்தர்களிடம் நன்கொடையாக பெற்று தங்க அங்கி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகளைக் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க:மேளதாளம் முழங்க தாம்பூலத்தில் பத்திரிக்கை வைத்து வாக்களிக்க அழைப்பு: அடடே ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.