ETV Bharat / state

சனாதன விவகாரம் குறித்த அமித் மாள்வியா மீதான வழக்கு; காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு! - திருச்சி குற்றப்பிரிவு காவல்துறை

Madurai bench of Madras high court: உதயநிதியின் சனாதன கருத்தை திரித்து பரப்பியதாக பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா மீது திருச்சி காவல் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கில், திருச்சி குற்றப்பிரிவு காவல்துறை மற்றும் புகார்தாரர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai high court
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 9:05 AM IST

மதுரை: திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசுகையில், “சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரானா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார்.

உதயநிதியின் பேச்சை விமர்சித்து பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மாள்வியா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில், “சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கரோனாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். சனாதன தர்மத்தைப் பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுக்கிறார்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

பாஜக நிர்வாகி அமித் மாள்வியாவின் பதிவைத் தொடர்ந்து, வட மாநிலங்களில் உதயநிதி பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்து உதயநிதி, இந்துக்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுத்ததாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். குறிப்பாக, பாஜக ஐடி பிரிவினர் பலர் உதயநிதிக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை அரசியல் உள்நோக்கத்துடன் திரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மாள்வியா மீது, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், “தன் மீது பதியப்பட்ட வழக்குகள் பொய்யானவை. எனவே, திருச்சி குற்றப்பிரிவு காவல் துறை தன் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்” என பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு மதுரைக்கிளை உயர் நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு குறித்து திருச்சி குற்றப்பிரிவு காவல் துறை மற்றும் புகார்தாரர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.