ETV Bharat / state

குன்னத்தூர் இரட்டை கொலை வழக்கு; செல்லூர் ஏசிபி மீது வன்கொடுமை சட்டம் பதிவு செய்ய உத்தரவு!

குன்னத்தூர் இரட்டை கொலை வழக்கில் சரியாக செயல்படாத செல்லூர் உதவி காவல் ஆணையர் விஜயகுமார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

செல்லூர் ஏசிபி மீது வன்கொடுமை சட்டம் பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்

author img

By

Published : Jul 26, 2023, 11:59 AM IST

மதுரை: குன்னத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “என் சகோதரர் கிருஷ்ணராஜன் மதுரை மாவட்டம் வரிச்சூர் அருகே குன்னத்தூரில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். அவரும், அவரது நண்பர் முனியசாமியும் 2020 அக்டோபர் மாதம் குன்னத்தூர் அகஸ்தீஸ்வரர் கோயில் அருகே கொலை செய்யப்பட்டனர்.

இந்தக் கொலையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருப்பதி, ஊராட்சி செயலாளர் வீரணன் என்ற பால்பாண்டி, வரிச்சூர் செந்தில், குன்னத்தூர் பாலகுரு ஆகியோரை கருப்பாயூரணி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விடும் நோக்கத்தில் போலீசார் செயல்பட்டு வருகின்றனர். எனவே, இரட்டை கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது கொலை வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட செந்தில் குமார் கைது செய்யப்படாதது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர் செந்தில் மாயமாகிவிட்டதாகவும், அவரை கண்டுபிடிக்கக் கோரி அவர் மனைவி முருகலெட்சுமி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தாக்கல் செய்த அறிக்கையில், “குன்னத்தூர் இரட்டை கொலை வழக்கை செல்லூர் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் விசாரித்து உள்ளார். அவர் விசாரணையில் பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளார். கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த செந்தில் குமார் 2021 ஜனவரியில் கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்தக் கொலையில் வரிச்சூர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார்.

இந்த வழக்கில் நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கு விசாரணையில் உதவி காவல் ஆணையர் விஜயகுமார் பல்வேறு தவறுகள் புரிந்து உள்ளார். இந்த மனு நிலுவையில் இருந்தபோது முறையாக விசாரணை நடத்தாமல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து உள்ளார். அந்த குற்றப் பத்திரிகை ஏற்கப்பட்டு உள்ளது. ஆனால், குற்றச்சாட்டு பதிவு இன்னும் நடைபெறவில்லை.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் கூடுதல் விசாரணைக்கு உத்தரவிடலாம் என பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இரட்டைக் கொலை வழக்கில் 28.4.2021இல் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க தென் மண்டல ஐஜி சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும். அந்தக்குழு 2 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்.

செல்லூர் உதவி காவல் ஆணையர் விஜயகுமார் மீது வன்கொடுமை சட்டம் மற்றும் பிற உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். விஜயகுமார் மீது உள்துறை செயலாளர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் உதவிய தென் மண்டல ஐஜி மற்றும் அவரது குழுவுக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவிக்கிறது. அவரது ஆடியோ மற்றும் வீடியோ விசாரணை முறை ஏற்கப்படுகிறது. இந்த முறையை அனைத்து வழக்குகளிலும் பின்பற்ற விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தேவர்' என அழைக்கும் அரசாணை தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.