ETV Bharat / state

மேகமலை வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு: ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தேனி: மேகமலை வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கூடாது என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

madurai-bench-of-mhc-
உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jan 21, 2021, 1:59 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ’தேனி மாவட்டம் 33 விழுக்காடு வனப்பகுதியாக உள்ளது. இதில் முக்கியமானது, மேகமலை வனப்பகுதி. இப்பகுதியில் அதிக வன உயிரினங்கள் பல்லுயிர்த்தன்மையுடன் உள்ளன.

இப்பகுதியில் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை 2292 ஆக்கிரமிப்புகள் உருவாகியுள்ளன. விவசாயத்திற்காக மரங்களையும், அப்பகுதியில் உள்ள விலங்குகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் அழித்து வருகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உத்தரவிட்டது.

தற்போது வரை ஆக்கிரமிப்பாளர்கள் அப்பகுதியிலிருந்து அகற்றப்படவில்லை. மேகமலை வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வழிவகை செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ’கடந்த 2019ஆம் ஆண்டு மேகமலை வனப்பகுதியில் குடியிருப்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற ஆயிரம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேகமலை வனப்பகுதியில் செல்லும் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே செல்கின்றன.

தேனி மாவட்ட ஆட்சியர் மூலம் சமாதான கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. சுமூகமான முறையில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து வாதாடிய மனுதாரர் தரப்பில், ’தேர்தல் நெருங்குவதால் வாக்குகள் பாதிக்கும் என்பதால் ஆக்கிரமிப்பாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 18 பழங்குடியின குடும்பங்கள் மட்டுமே அப்பகுதியில் வசித்து வருகின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதத்திற்கு பின்னர் நீதிபதிகள், ’வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களை அனுமதித்தால் காடுகள் அழியும் சூழ்நிலை ஏற்படும். வணிக ரீதியாக விவசாயம் நடைபெறுவதை நிறுத்த வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:சிகலாவை கட்சியில் இணைக்க மறுக்கும் எடப்பாடி... சூடுபிடித்துள்ள தமிழ்நாடு தேர்தல்களம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.