ETV Bharat / state

காவல்துறையின் விசாரணையால் தற்கொலை : சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் - madurai high court transfer of madurai carpenter death to cb cid enquiry

மதுரை தல்லாகுளம் காவல்நிலையம் அருகே இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையின் விசாரணையால் தற்கொலை : சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், காவல்துறையின் விசாரணையால் தற்கொலை வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்
காவல்துறையின் விசாரணையால் தற்கொலை வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்
author img

By

Published : Mar 8, 2022, 10:30 AM IST

மதுரை: பீ.பி. குளம், பி.டி. ராஜன் சாலையில் வசித்துவரும் மலைராஜன் - ரெங்கம்மாள் தம்பதியின் மகன் ஈஸ்வரன் (30). இவர் தனது வீட்டின் அருகே (ஜனவரி 18) நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தபோது தல்லாகுளம் காவலர்கள் மது வைத்திருப்பதாக கூறி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது ஈஸ்வரன் காவலர்களிடமிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து, ஈஸ்வரன் அமர்ந்திருந்த பகுதியில் நான்கு மதுபாட்டில்களைக் கைப்பற்றியதாகவும் மேலும் கூடுதலாக மதுபாட்டில்கள் இருக்கின்றனவா என்பது குறித்து ஈஸ்வரனின் வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். ஈஸ்வரனின் தாயார் ரெங்கம்மாள் செல்போனை பறித்துக்கொண்டதுடன், அவரது இரு சக்கர வாகனத்தின் சாவியையும் காவல் துறையினர் எடுத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே காவல் துறையினர் அடித்ததால் தப்பியோடிய ஈஸ்வரன் தல்லாகுளம் காவல் நிலையம் அருகே அம்பேத்கரின் சிலை முன்பாக தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர், பொதுமக்கள் அவரை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

இதனையடுத்து நள்ளிரவு ஒரு மணிக்கு காவல் நிலையத்திலிருந்து ஈஸ்வரனின் பெற்றோரை தொடர்புகொண்டு ஈஸ்வரன் தீக்குளித்தது குறித்து தகவல் அளித்துள்ளனர்.

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

இந்நிலையில், தீக்காயங்களுடன் காணொலி வெளியிட்டுள்ள ஈஸ்வரன் தன்னை காவல் துறையினர் அடிக்கடி துன்புறுத்தியதோடு பணம் கேட்டதாகவும், பொய் வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து ஈஸ்வரனின் பெற்றோர் தரப்பில், தவறான புகாரின் அடிப்படையில், தல்லாகுளம் காவல் ஆய்வாளர் விசாரணை எனக்கூறி எனது மகனை அழைத்துச் சென்று துன்புறுத்தியதால், தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே, ஈஸ்வரன் தாயார் ரெங்கம்மாள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " எனது மகன் ஈஸ்வரன் கார்பெண்டராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். அவர் மீது கடந்த ஜனவரி 19ஆம் தேதி வரை எவ்விதமான வழக்கும் இல்லை. இந்நிலையில் தவறான புகாரின் அடிப்படையில், தல்லாகுளம் காவல் ஆய்வாளர் விசாரணை எனக்கூறி, எனது மகனை அழைத்துச் சென்று துன்புறுத்தியதால், மன உளைச்சலுக்கு ஆளாகி என் மகன் தற்கொலை செய்து கொண்டார்.

காவல்துறையின் விசாரணையால் தற்கொலை
காவல்துறையின் விசாரணையால் தற்கொலை

இது தொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை, தொடர்ந்து தல்லாகுளம் காவல் ஆய்வாளர் விசாரித்தால் வழக்கின் உண்மை நிலை தெரிய வராது. ஆகவே தல்லாகுளம் காவல் நிலையத்தில் எனது மகன் பெயரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இதனையடுத்து, நேற்று (மார்ச்.7) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: உயிரைக் காத்துக்கொள்ள செல்போன் வெளிச்சத்தில் மைனஸ் 2 டிகிரி குளிரில் நடந்தோம்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.