ETV Bharat / state

’சிபிஐ தன்னாட்சி அமைப்பாக செயல்பட தேவையான சட்டத்தை உருவாக்க வேண்டும்’ - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக சிபிஐ செயல்பட தேவையான சட்டத்தை உருவாக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

CBI  High Court Madurai Branch  Order of the High Court Madurai Branch  necessary for the CBI  Order of the High Court Madurai Branch to make the necessary for the CBI  madurai news  madurai latest news  மதுரை செய்திகள்  சிபிஐக்கு தேவையான சட்டத்தை உருவாக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு  சிபிஐக்கு தேவையான சட்டம்
உயர்நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Aug 18, 2021, 7:39 AM IST

மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த 300 கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரிக்கக் கோரி முன்னதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதில், “தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக சிபிஐ செயல்படத் தேவையான சட்டத்தை உருவாக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். தேர்தல் ஆணையம், தலைமை தணிக்கை ஆணையரகத்தைப் போல சிபிஐ சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

சிபிஐக்கு நவீன வசதிகள்

சிபிஐக்கு தேவையான நிதியை ஓராண்டிற்குள் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். அமைச்சரவை செயலாளரைப் போல தனித்த அதிகாரத்துடன் அமைச்சர், பிரதமரிடம் நேரடியாக அறிக்கையளிக்கும் வகையில் சிபிஐ இயக்குநருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இல்லாமல் தனித்து செயல்பட வேண்டும். அமெரிக்காவின் எஃப்பிஐ, இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு காவலரை போல நவீன வசதிகள், தொழில்நுட்பங்கள் சிபிஐக்கு வழங்கப்பட வேண்டும்.

சைபர், தடயவியல் துறை, நிதி தணிக்கை ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்டவர்களை சிபிஐயில் சேர்ப்பது குறித்து ஆறு வாரங்களில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

6 வாரங்களில் தாக்கல்

சிபிஐக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கட்டுமானங்கள், குடியிருப்பு வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றை ஆறு வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.

காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது சிபிஐ இயக்குநர் ஆஜராக வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'வருமானவரிக்கு வட்டி ஏற்கெனவே செலுத்திவிட்டோம்' - நடிகர் சூர்யா தரப்பு விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.