ETV Bharat / state

அரசு மக்கள் தொடர்பு அதிகாரி (GPRO) என அழைக்க கோரிய வழக்கு தள்ளுபடி! - புதுக்கோட்டை மாவட்டம்

PRO to GPRO :அரசு அலுவலகங்களில் பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளை (PRO) அரசு மக்கள் தொடர்பு அதிகாரி (GPRO) என அழைக்க உத்தரவிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு மக்கள் தொடர்பு அதிகாரி (GPRO) என அழைக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

author img

By

Published : Aug 17, 2023, 6:17 PM IST

மதுரை: மக்கள் தொடர்பு அதிகாரிகளை அரசு மக்கள் தொடர்பு அதிகாரிகள் என அழைக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். அந்த பொது நல மனுவில்,
அரசு அலுவலகங்களில் மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அரசு திட்டங்களை மக்களுக்கு தெரிவுபடுத்துகின்றனர். கடந்த 1970ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் மக்கள் தொடர்பு அதிகாரி என்ற பதவி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த அதிகாரிகளை PRO என்று அழைக்கப்படுவர். தற்போது தனியார் நிறுவனங்களில் இது போன்று மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் அரசு மக்கள் தொடர்பு அதிகாரிக்கும் தனியார் மக்கள் தொடர்பு அதிகரிக்கும் வேறுபாடுகள் இல்லாமல் ஒரு குழப்ப நிலை உருவாகிறது.

மேலும் அரசு மருத்துவர் மற்றும் அரசு வழக்கறிஞர் என வேறுபாடுகள் உள்ளது, ஆனால் இது போன்று மக்களுக்கு அரசு திட்டங்களை எடுத்து செல்லும் PROக்களை, அரசு மக்கள் தொடர்பு அதிகாரி GPRO என்று அழைக்க வேண்டும். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அரசு மக்கள் தொடர்பு அதிகாரி என அழைக்க உத்தரவிட கோரி மனு செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (ஆகஸ்ட் 17) விசாரணைக்கு வந்தது, அப்போது இதை விசாரித்த வழக்கறிஞர்கள் வழக்கில் பொதுநலம் எதுவும் இல்லை என தெரிவித்தையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை: சென்னையில் மட்டும் 9.08 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.