தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல் பாண்டியன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி உயிரிழந்தபின்பு யாசகம் பெற்று வாழத்தொடங்கினார்.
மேலும், யாசகமாக பெறும் பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கி உதவி செய்துவருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு மதுரை வந்த அவர், ஊரடங்கு காரணமாக இங்கேயே தங்கி யாசம் பெறத் தொடங்கினார். இந்நிலையில், கடந்த மே மாதம் முதன்முதலாக தான் யாசகம் பெற்ற 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கரோனா நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் டிஜி வினயிடம் வழங்கினார்.
அதன்பிறகு தொடர்ச்சியாக எட்டு முறை தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 80,000 ரூபாயை கரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் பத்தாவது முறையாக 10 ஆயிரம் ரூபாயை கரோனா நிவாரண நிதியாக ஆட்சியரிடம் வழங்கினார். இதன்மூலம் 1 லட்சம் ரூபாயை கரோனா நிவாரண நிதியாக இவர் வழங்கியுள்ளார்.
இதனிடையே சமூக சேவைகள் செய்துவரும் இதயம் அறக்கட்டளையின் நிர்வாகி சிவகுமார் என்பவர் பூல் பாண்டியன் போன்ற நபர்களை மாவட்ட நிர்வாகம் ஊக்குவிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'விருது வழங்க தேடப்பட்ட யாசகர், நிவாரணம் வழங்க வந்தபோது கெளரவிக்கப்பட்டார்'