மதுரை: கள்ளழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி கதவுகளுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ கள்ளழகர் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி கதவுகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் பாரம்பரிய பூசாரிகளால் இன்று நடத்தப்பட்டது.
அப்போது கள்ளழகர் பெருமாள் கருட வாகனத்தில் பதினெட்டாம்படி கோயில் வாசல் முன்பு எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் வழங்க பெருமாளை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பௌர்ணமி தினத்தன்று மட்டுமே பதினெட்டாம் படி சன்னதி கதவுகளுக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவில் நடந்த சுவாரஸ்யம்!