ETV Bharat / state

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பணி தீவிரம்

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரையின் சித்திரைத் திருவிழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

கள்ளழகர் வைகை
author img

By

Published : Apr 17, 2019, 11:39 PM IST

உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் இந்த விழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர்.

இதனையொட்டி கள்ளழகர் அழகர்கோவில் திருமாலிருஞ்சோலையில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்டு இன்று மாலை மதுரை நோக்கிச் சென்றார். மண்டூக மகரிஷிக்கு மாற்றம் கொடுப்பதற்காக மதுரைக்கு பயணிக்கும் கள்ளழகர் ஆழ்வார்புரம் அருகிலுள்ள வைகை ஆற்றில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் நாள் அதிகாலை எழுந்தருளுகிறார் .

20ஆம் தேதி வீரராகவ பெருமாள் அவரை வரவேற்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வைகை ஆற்றங்கரையோரம் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து ராமராயர் மண்டபத்தில் சென்றடைகிறார். அங்கு பிற்பகலில் அவருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கள்ளழகர் வைகை

பிறகு அங்கிருந்து புறப்படும் அழகர் வண்டியூர் செல்கிறார். வண்டியில் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதி மண்டுக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். இதையடுத்து தல்லாகுளத்தில் நடைபெறும் பூப்பல்லக்கு நிகழ்ச்சியில் கள்ளழகருக்கு பிரியாவிடை அளிக்கப்படுகிறது.

Intro:உலகப் புகழ்பெற்ற மதுரையின் முக்கிய சித்திரை திருவிழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வை போகத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன

Body:உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு மதுரையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அருள்மிகு கள்ளழகர் அழகர்கோவில் திருமாலிருஞ்சோலையில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்டு கோவிலில் இருந்து இன்று மாலை மதுரை நோக்கி கிளம்புகிறார்

மண்டூக மகரிஷிக்கு மாற்றம் கொடுப்பதற்காக மதுரைக்கு பயணிக்கும் அவர் madurai ஆழ்வார்புரம் அருகிலுள்ள வைகை ஆற்றில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் நாள் அதிகாலை எழுந்தருளுகிறார் அவரை வீரராகவ பெருமாள் எதிர்கொண்டு வரவேற்கிறார் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வைகை ஆற்றங்கரையோரம் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்து ராமராயர் மண்டபத்தில் சென்றடைகிறார் அங்கு பிற்பகலில் அவருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது பிறகு அங்கிருந்து புறப்படும் அழகர் வண்டியூர் செல்கிறார் வண்டியில் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதி மண்டுக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார்

அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தங்கி தசாவதாரங்களில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார் இருபத்தி ஒன்றாம் தேதி அதிகாலை ராமராயர் மண்டபத்தில் இருந்து புறப்படும் கள்ளழகர் அன்று இரவு தல்லாகுளம் வந்தடைகிறார் அங்கு நடைபெறும் பூப்பல்லக்கு நிகழ்ச்சியில் கள்ளழகருக்கு பிரியாவிடை அளிக்கப்படுகிறது இருபத்தி மூன்றாம் தேதி அதிகாலையில் கள்ளழகர் மீண்டும் திருமாலிருஞ்சோலை வந்தடைகிறார்

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.