ETV Bharat / state

அதிரவைக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4வது சுற்றில் சீறும் காளைகள்.. திமிலைப் பிடித்து பரிசுகளை குவிக்கும் காளையர்கள்! - Alankanallur Jallikattu winner

Alanganallur Jallikattu: அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 110 காளைகள் வரை அவிழ்த்து விடப்பட்ட நிலையில், 150 வீரர்கள் களம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முந்தைய சுற்றுகளில் வெற்றி பெற்று தகுதியான 7 பேர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 12:47 PM IST

Updated : Jan 17, 2024, 12:56 PM IST

மதுரை: அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 110 காளைகள் வரை வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், 8 காளைகளை பிடித்த சிவகங்கையை சேர்ந்தவர் முன்னிலை இருந்தார். இதையடுத்து தற்போதுவரை நடந்து முடிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 3வது சுற்று முடிவில் 10.33 மணி வரையில் 150 மேற்பட்ட காளையர்கள் களம் கண்டுள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர்கள் சூரி, அருண் விஜய், விஜய் டிவி புகழ் நீயா? நானா புகழ் தொகுப்பாளர் சி.கோபிநாத், தமிழ் சொற்பொழிவாளரும் பட்டிமன்ற பேச்சாளருமான பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் கண்டுகளித்து வருகின்றனர்.

  • 11.25 மணி நிலவரப்படி, திண்டுக்கல் மாவட்டம், ராமராஜபுரத்தை சேர்ந்த ஜம்பு என்ற காளை வெற்றி பெற்ற நிலையில், கோபிநாத் சார்பில் வெள்ளி நாணயம் சிறப்பு பரிசாக வழங்கியுள்ளார்.
  • புதுக்கோட்டை மாவட்டம், கொத்தகம்பட்டி மாரீ குரூப்ஸ் காளை வென்ற நிலையில் சைக்கிளும், கோபிநாத் சார்பில் வெள்ளி நாணயமும் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது.
  • அலங்காநல்லூர் சின்னன் - பெரியண்ணன் நொண்டி வீரன் மலையாள கருப்பு நாகம்மாள் காளை வென்ற நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் சிறப்பு பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது.
  • மதுரை சரக டிஐஜி தரப்பில் ஆண்டார் கொட்டாரம் ஜோதி காளை வென்ற நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தங்க நாணயமும், கோபிநாத் சார்பில் வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.

11.37 மணி நிலவரப்படி, சிவகங்கை மாவட்டம், காளையார் கோயிலைச் சேர்ந்த காளையை வீரத்தமிழச்சி ஒருவர் அவிழ்த்துவிட்ட நிலையில், பிடிமாடானது. இருப்பினும், அப்பெண்ணிற்கு சிறப்பு பரிசாக ஒரு சைக்கிள் வழங்கப்பட்டது. இதனையடுத்து 192, 176, 180, 198, 175, 161, 183 ஆகிய எண்களைக் கொண்ட காளையர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.

இவர்களும் களத்தில் தொடர்ந்து ஆர்வமுடன் திமிறும் காளைகளின் திமிலைப் பிடித்து வெற்றி பெறும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது ஆரஞ்சு நிற ஆடையணிந்த மாடுபிடி வீரர்கள் குழு களம் இறங்கி உள்ளனர். முன்னதாக, ஜல்லிக்கட்டு களத்திற்குள் டீ-சர்ட்டை மாற்றிக்கொண்டு விதிமுறையை மீறி வந்திருந்த மாடுபிடி வீரரை காவல்துறையினர் அடையாளம் கண்டு வெளியேற்றினர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காயமடைந்தவர்கள் விபரம்:- (10.15 மணி நிலவரம்)

  • மாடுபிடி வீரர்கள்: 12 பேர்
  • மாட்டின் உரிமையாளர்கள்: 3 பேர்
  • பார்வையாளர்கள்: 1 நபர்
  • காவல்துறை: 2 பேர்
  • ஆம்புலன்ஸ் ஊழியர்: 1 நபர்
  • மேல்சிகிச்சை: 3 பேர்
  • மொத்தம்: 19 பேர்

4 வது சுற்று முடிவில் களம் கண்ட காளைகள் 302

  • பிடிபட்ட மாடுகள்- 102 பேர்
  • கட்டித் தழுவிய காளையர் - 400 பேர்

ஜல்லிக்கட்டு களத்தில் கம்பீரமாக நின்ற காளை: வெள்ளியங்குன்றம் ஆண்டிச்சாமி கோயில் காளை வீரர்களை தொட விடாமல் விளையாடியது. இக்காளை வெற்றி பெற்றநிலையில் காளையின் உரிமையாளருக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கப்பட்டது.

இதுவரையில் முன்னிலை வகிக்கும் காளையர்கள் விபரம்:-

வ.எண் முன்னிலை பெயர் அடக்கிய காளைகள்
1. முதலிடம்

சிவகங்கையை சேர்ந்த அபிசித்தர்

ரோஸ் சீருடை எண் - 75

11 காளைகள்
2.இரண்டாம் இடம்

வலையங்குளம் பாலமுருகன்,

ரோஸ் சீருடை எண் - 73

7 காளைகள்
3.மூன்றாம் இடம்

1. கட்டிக்குளம் சிவசேரன்,

ரோஸ் சீருடை எண் - 58

2. மேலமடை தமிழரசன்,

ஊதா சீருடை - 176

6 காளைகள்

6 காளைகள்

ஜல்லிக்கட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கில் ஏராளமான வெளிநாட்டினர் மிகவும் ஆர்வமாக இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டும் தங்களது கேமிராக்களில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். இப்போட்டியில் நிசான் மேக்னைட் காரும், அப்பாச்சி பைக்கும் வெற்றி பெறுவோருக்கு பரிசாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 110 காளைகள் அவிழ்ப்பு.. 8 காளைகள் பிடித்து சிவகங்கை வீரர் முன்னிலை!

Last Updated : Jan 17, 2024, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.