தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை நேற்று வெளியிட்டதைத் தொடர்ந்து அதனை வரவேற்று மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழுவினர், பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கரோனா ஊரடங்கை காரணம் காட்டி தமிழ்நாடு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தடைபட்டுவிடுமோ எனப் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், வீரர்கள் கவலையில் இருந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து கிராம மக்களும், விழாக் குழுவினரும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 5 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு: 70 வயது மூதாட்டி போன்று சிறுமியை ஆக்கிய கொடூரம்