ETV Bharat / state

டெல்லி எய்ம்ஸை போல நவீன ஆய்வக வசதியுடன் அமையும் மதுரை எய்ம்ஸ்! - Delhi AIIMS Hospital

மதுரை: டெல்லி எய்ம்ஸை போல, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையும் நவீன ஆய்வக வசதி கொண்டதாக அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

author img

By

Published : Mar 1, 2020, 4:10 PM IST

இரண்டு மருத்துவக் கல்லூரிகளின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மதுரை வந்துள்ளார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “சிறந்த ஆளுமைமிக்க பிரதமராக நரேந்திர மோடி இந்தியாவை வழிநடத்துகிறார். இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி 100 நாள்களிலேயே, 75 மருத்துவக்கல்லூரி கட்டுமானத்திற்கு அனுமதியையும் அவர் வழங்கியுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டி

இந்தியாவில் பிறந்து கடைக்கோடி குடிமகனுக்கும் சிறந்த மருத்துவம் வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறார். அதன் ஒருபகுதியாக, பிரதமர் தமிழ்நாட்டில் மட்டும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை வழங்கியுள்ளார். அதற்கான முதல் தவணையாக நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது. 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இடம்பெற உள்ளதற்கு, எனது வாழ்த்துக்களை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின், அடிப்படைக் கட்டமைப்புகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. தொடர்ந்து ஜய்க்கா நிதி நிறுவனக்குழு மூன்று முறை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நிதி விடுவிக்கப்படும். குறிப்பாக, மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, டெல்லியில் இருப்பது போலவே மேம்படுத்தபட்ட நவீன ஆய்வக (Research center) வசதியும் கொண்டதாக அமையப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முதல்கட்ட பணியாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்காக, சுமார் 233 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: 'ஊழலை விட மிகக் கொடியது மதவெறி... அதனை முறியடியுங்கள்' - திருமுருகன் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.