மதுரை: மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் வல்லரசு என்பவர், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக சில தகவல்களை கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பின்வருமாறு பதில் அளித்துள்ளது.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு முன்னர் செய்யப்பட வேண்டிய அனைத்து ஆவணமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது.
- இந்திய அரசு மற்றும் ஜப்பான் அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்துப் பணிகள் முடிவடைந்துள்ளது.
- இரு நாட்டு ஒப்பந்தப்படி மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் அக்டோபர் 2026ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட வேண்டும்.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு மொத்தமாக ரூ.1,977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான திட்ட மேலாண்மை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். (PMC - Project Management Consultant)
- எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது.
- 2021 - 2022ஆம் கல்வி ஆண்டிலிருந்து MBBS வகுப்புகள் தற்காலிகமான இடங்களில் துவங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2024 புத்தாண்டு கொண்டாட்டம்:புதுச்சேரியில் கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணிகள்..!