மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவர் சேடப்பட்டி முத்தையா செய்தியாளர்களிடம், "எடப்பாடி அரசில் பால்வளத் துறை மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகள் நடைபெற்றுக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
மதுரையில் ஆவின் தேர்தலை நடத்தாமலும் அதன் உறுப்பினர்களுக்கே தெரியாமலும் அதிமுகவினர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெயரை நோட்டீஸில் ஒட்டிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
அதைப்போல் தூத்துக்குடி ஆவின் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது என மாவட்ட ஆட்சியரே தேர்தலை ரத்துசெய்துள்ளார். மதுரையின் இரண்டு அமைச்சர்கள் ஆவின் தேர்தலை நடத்தாமல் வெற்றிபெற்றவர்கள் என அவர்களே சிலரைத் தேர்ந்தெடுத்ததாக நோட்டீஸ் ஒட்டிருப்பது கண்டனத்திற்குரியது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தல் அட்டவணை வெளியீடு!