ETV Bharat / state

பைடன் அரசுக்கு முழு ஒத்துழைப்புத் தருக - ட்ரம்புக்கு மதுரை ஆதீனம் வேண்டுகோள்!

மதுரை: அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸ் அரசுக்கு ட்ரம்ப் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை ஆதீனம் அறிக்கை
மதுரை ஆதீனம் அறிக்கை
author img

By

Published : Nov 9, 2020, 3:04 AM IST

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 3ஆம் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மூன்று நாளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்ற நிலையில், பைடன் 284 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.

இருப்பினும், தற்போது அதிபராகவுள்ள ட்ரம்ப் தேர்தலில் முறைக்கேடு நடந்துள்ளதாக எவ்வித ஆதரமும் இன்றி குற்றஞ்சாட்டினார். மேலும், தேர்தல் முடிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸ் அரசுக்கு ட்ரம்ப் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து மதுரை ஆதினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க ஐக்கிய நாட்டின் 46ஆவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றிருக்கின்ற ஜோ பைடனுக்கும், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றிருக்கின்ற கமலா ஹாரிஸிக்கும் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசன்னிதானம் தமது ஆசிர்வாதத்தைத் தெரிவித்துள்ளார்.

இருவரும் வரும் தேர்தலில் அதிபர்களாக வருவார்கள் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க வாழ் இந்தியர்களிடத்திலே தெரிவித்திருந்தோம். இவர்கள் மூலமாக அமெரிக்கா, இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் கருப்பின மக்கள் வாழும் மற்ற நாட்டு மக்களிடையே நல்ல ஒற்றுமை ஏற்படும்.

மதுரை ஆதீனம் அறிக்கை
மதுரை ஆதீனம் அறிக்கை

மக்கள் அனைவரும் அமைதியாக வாழ்ந்திட புதிய அரசுக்கு தமது மனமுவந்த வாழ்த்துக்களைத் தெரிவித்திட வேண்டுமென்றும், இந்த அரசுக்கு முழு ஒத்துழைப்புத்தர வேண்டுமென்றும், புதிய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டுமென்றும் அதிபர் ட்ரம்பை மனிதாபிமான அடிப்படையில் அன்பு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.