ETV Bharat / state

யூடியூப்-யை ஏன் தடை செய்யக்கூடாது? சாட்டை துரைமுருகன் வழக்கில் நீதிபதி கேள்வி - ஸ்டாலின் குறித்து யூடியூபர் சாட்டை துரைமுருகன் தவறான பேச்சு

யூடியூப்பில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது, துப்பாக்கி தயாரிப்பது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. தவறான வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து கொண்டே இருந்தால் யூடியூப்-யை ஏன் தடை செய்யக்கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்
author img

By

Published : Jan 20, 2022, 7:42 PM IST

மதுரை: யூடியூப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்ததால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சாட்டை துரைமுருகன் மீதான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணை செய்து, இனிமேல் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்ப மாட்டேன் என அவர் உறுதிமொழி பத்திரம் கொடுத்ததையடுத்து நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கிடையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி, தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசி வருகிறார். இதன்பேரில் மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மதுரைக்கிளையில் அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று (ஜன.20) நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தவறான பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை?

இதையடுத்து நீதிபதி புகழேந்தி, "அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சாட்டை துரைமுருகன் என்ன தொழில் செய்கிறார்? யூடியூபில் இதுபோன்ற செய்திகள் வெளியிடுவதன் மூலம் அவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதை கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

யூடியூப்பில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது, துப்பாக்கி தயாரிப்பது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? வங்கிக் கொள்ளை போன்ற விவரங்களை யூடியூப் மூலம் கற்றுக் கொடுத்து கொண்டு இருப்பதை எவ்வாறு ஆதரித்து வருகிறார்கள்? இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

யூடியூப் தவறான வீடியோக்களையும் வெளியிடுமா? வேறு மாநிலத்தில் இருந்து தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொண்டே இருந்தால் யூடியூப்-யை ஏன் தடை செய்யக்கூடாது? யூடியூப்பில் நல்ல விஷயங்கள் உள்ளன. ஆனால் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா?

சைபர் கிரைம் டிஜிபி பதிலளிக்க உத்தரவு

யூடியூப்-யை பார்த்து துப்பாக்கி தயாரித்ததாகவும், நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாகவும், கள்ளச்சாராயம் தயாரித்ததாகவும் வழக்குகள் பதிவாகி உள்ளன.

இதனை எவ்வாறு தடுக்க போகிறோம்?" எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கில் கே.கே. ராமகிருஷ்ணன் என்பவரை நியமித்து உத்தரவிட்டார். மேலும் யூடியூப்பில் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: வாடகை பாக்கி ரூ.52 லட்சம் செலுத்துக: 'அண்ணா நகர் கிளப்'புக்கு கெடு...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.