ETV Bharat / state

'அரசு நிலங்கள், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனித் துறையை உருவாக்க வேண்டும்' - waterbody occupied

அரசு நிலங்கள், நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு தனியாக ஒரு துறையை உருவாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

madras high court madurai branch order on waterbody occupied
'அரசு நிலங்கள், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனித் துறையை உருவாக்க வேண்டும்'- உயர் நீதிமன்றம் கருத்து
author img

By

Published : Nov 6, 2020, 6:23 PM IST

உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களில், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சிவராம், அந்தோணி முத்து, கணபதி உள்ளிட்ட பல்வேறு மனுதாரர்கள் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் இன்று நீதிபதிகள், என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அரசு நிலங்கள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இதில், எவ்வித பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், அரசு சொத்துகளை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை என்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வருவாய் துறையினரும் முக்கிய பங்கு ஆற்ற வேண்டியது உள்ளது என்றும் தெரிவித்தனர்.

மேலும், வருவாய்துறையினருக்கு பல்வேறு பணிகள் உள்ளதால், அரசு நிலங்கள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தனியாக ஒரு துறையை உருவாக்க வேண்டும் என கருத்து தெரிவித்ததோடு இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்கள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்பு குளத்தை மீட்டு தூர்வாரிய இளைஞர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.